ஸ்ரீ குருப்ரியாஜி ஸ்வாமினி 1988 ல் ஸ்ரீ மஹாதேவி சங்கம் என்னும் சத்சங்கத்தை தொடங்கி வைத்தார். இந்த சத்சங்கமே பின்னாளில் பலரைச் சென்றடைய எஸ்எம்எஸ் பப்ளிக் சாரிட்டபிள் ட்ரஸ்ட் என்று மலர்ந்து விரிந்தது.

சத்தியம், எளிமை, உண்மையான அன்பு, அடக்கம் இவையே இந்த சங்கத்தின் நான்கு தூண்கள் ஆகும். இந்த சத்சங்கம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். (Regd.No.2789/10). இந்த சத்சங்கம் நடக்கும் சமூக நலத்திட்டங்கள்:

  • 1. தகுதியான பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நிதியுதவி கொடுப்பது.
  • 2. ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி வழங்குவது.
  • 3. கேன்ஸர் நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டவருக்கு நேரில் சென்று ஆறுதல் அளித்து தேவையான மருத்துவ உதவி செய்வது.
  • 4. இயற்கை பேரிடர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னதானம் மற்றும் துணிமணிகள் வழங்குதல்.
  • 5. விழிப்புணர்வு முகாம் மற்றும் மருத்துவ முகாம் நடத்துவது.
  • 6. நலிந்த பெண்களுக்கு ஊக்கமும் மற்றும் உதவித் தொகையும் கொடுப்பது

என்று பல சமூக நல மனப்பான்மையோடு இந்த சத்சங்கம் இன்றளவும் நடத்தப்பட்டு வருகின்றது.